இந்தியா: ஐ.டி துறையில் இந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு வேலை

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் இருந்த பின்னடைவு நிலை மாறி, இப்போது மீட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் துறையில் 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இப்போது ஐ.டி. துறை சார்ந்த நிறுவனங்களில் பலருக்கு வேலை கிடைத்து வருகிறது.
நாட்டில் இந்த நிதியாண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் நடப்பு நிதி ஆண்டில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
ஐ.டி. துறை மேலும் வளர்ச்சி பெறும் வகையில் புதிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களைத் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயத் துறையில் அதிக உற்பத்திக்கு...
தரமான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள், சிறந்த நவீனத் தொழில்நுட்பம் மற்றும் காலத்துக்கு ஏற்ற பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் விவசாயத் துறையில் அதிக உற்பத்தியை எட்ட முடியும்.
தமிழகத்தில் ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க சிஐஐ முக்கிய பங்காற்றுகிறது. சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை- பெங்களூர் இடையே தொழில் பிரகாரம் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கோபாலகிருஷ்ணன்.
சிஐஐ தமிழ்நாடு பிரிவின் தலைவர் நந்தினி கூறியதாவது:
தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) துறை வளர்ச்சி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகள் வளர்ச்சி பெறவும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன.
சென்னை தரமணியில் தமிழக அரசு சார்பில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டைசல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வளர்ச்சி குறித்து சிஐஐ ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கும். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அந்தக் குழுக்களுக்கு சிஐஐ பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் நந்தினி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications