ரயில் பாதை தகர்ப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்டோர் குறித்து அறிக்கை-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விழுப்புரம் அருகே ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் பிடித்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டோர் குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்ப்பட்ட வழக்கில் 30க்கும் மேற்பட்டோரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் தமிழ் வேங்கை என்பவரும் ஒருவர்.
இந்த நிலையில் தமிழ் வேங்கையின் மனைவி மங்கயர்க்கரசி உள்பட பிடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உறவினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு பரிசீலனைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடித்துச் செல்லப்பட்டோரில் 9 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பிடித்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்போர் குறித்து நாளைக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications