ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சந்தேக நபர் கைது-நக்சலைட்டா?
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் மர்மான முறையில் நடமாடிய நபரை வனத்துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். அவர் நக்சலைட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
செண்பகத்தோப்பு வனப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியாகும். இங்கு சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில், 24 மணி நேர காவல் மற்றும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு பேரைப் பார்த்த வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது திடீரென 3 பேர் வனத்துறையினரை பிடித்துத் தள்ளி விட்டு தப்பி ஓடினர். இதை எதிர்பார்க்காத வனத்துறையினர், மீதமிருந்த நபரை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
பின்னர் அந்த நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் என்று தெரிய வந்தது.
அவர் நக்சலைட்டாக இருக்கலாம் அல்லது நக்சலைட் ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications