அதிமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை-அழகு திருநாவுக்கரசு

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வரிசையில் நேற்று இணைந்துள்ளார் அழகு திருநாவுக்கரசு. இவர் அதிமுக அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர்.
இந்த நிலையில் இவரும் திமுகவுக்கு வரப் போவதாக நேற்று செய்தி பரவியது. அதற்கேற்ப நேற்று இரவு முதல்வர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களோடு அண்ணா அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் அழகு திருநாவுக்கரசு.
அவருடன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் வேதாரண்யம் மாணிக்கம், சீர்காழி மூர்த்தி, மயிலாடுதுறை தங்கமணி மேலும் பல அதிமுக நிர்வாகிகளும், பாஜகவைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினரும், தஞ்சை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஞானசேகரன் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அழகு திருநாவுக்கரசு பேசுகையில், அதிமுகவில் உண்மையான தொண்டன் முதல் 2ம் கட்டத் தலைவர்கள் வரை யாருக்குமே மரியாதை இல்லை. அனைவருமே அவமானத்தில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
யாருமே ஜெயலலிதாவை சந்தித்துப் பேச முடியாது. ஆனால் திமுகவில் முதல்வர் கருணாநிதியை யார் வேண்டுமானாலும் சந்தித்துப் பேச முடிகிறது.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்களுக்கு மரியாதை இல்லை. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதிமுக சீரழித்து வருகிறது.
துணை முதல்வர் ஸ்டாலினின் அயராத உழைப்பு மக்களை கவர்ந்துள்ளது. இந்த அரசின் திட்டங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கு திமுகவில் உரிய மரியாதை கிடைக்கிறது. திராவிட கொள்கையைப் பின்பற்றும் ஒரே கட்சியும் திமுக தான். முறைப்படி விரைவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் இணைவேன் என்றார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் ஆவார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications