சென்னையில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளை அழைத்து வர திருமா முயற்சி?
மதுரை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரகசியமான முறையில் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள முசிறியில் வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதிக் கட்ட போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். அதன் பிறகு பார்வதி அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கனடாவில் உள்ள தனது மகள் வீட்டில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
எனவே மீண்டும் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்பினார். இதற்காக மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக பார்வதி அம்மாள் வந்தார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் இறங்கக் கூட அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் .
இந்த நிலையில், தமிழக அரசின் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற நிபந்தனைகள் விதிப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதனை விரும்பாத பார்வதி அம்மாள் நிபந்தனையை ஏற்காமல் இலங்கையில் உள்ள தனது சொந்தவூரான வல்வெட்டித் துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தனு நிபந்தனைகளை தளர்த்தி சிகிச்சைக்கு அனுமதியளித்து.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் அதைப் பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிங்கம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பார்வதி அம்மாள் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த, ஈழத்தமிழர்களும், அவரது நெருங்கிய உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரை பார்த்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பார்வதி அம்மாளை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு செய்து வருகிறார்.
பார்வதி அம்மாளை கவணித்து வரும் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மற்றும் கனடாவில் இருந்துவரும் அவரது மகளையும் திருமாவளவன் எம்.பி தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அவர்களின் இசைவு கிடைத்தப் பின்பு திருமாவளவன் யாழ்ப்பாணம் மருத்துவமனைச் சென்று பார்வதி அம்மாளை அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பின்னரே பார்வதி அம்மாள் அழைத்து வரப்படுவார் என விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications