தமிழையும், தமிழர்களையும் உயர்த்த கருணாநிதி, ஜெ. எதுவும் செய்யவில்லை-சீமான்
சென்னை: தமிழையும், தமிழர்களையும் உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இன்னாள் முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நேற்று சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழன் என்ற முறையில் ஆதரவு தெரிவிக்கிறேன்.
இந்த போராட்டம் வழக்கறிஞர்கள் போராட்டமாக அல்லாமல் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
2006ம் ஆண்டிலேயே மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற உத்தரவு வழங்கிவிட்டது. அந்த உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னமும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இன்னாள் முதல்வர் கருணாநிதியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தமிழையும், தமிழக மக்களையும் உயர்த்த இவர்கள் இருவரும் எதுவும் செய்யவில்லை.பெயர்ப் பலைகைகளை தமிழில் மாற்ற எடுத்து வரும் நடவடிக்கை எல்லாம் வெறும் கண் துடைப்புதான்.
செம்மொழி மாநாட்டிற்கு இந்தியாவின் முதல் குடிமகள் வருகிறார். அவர் மூலமாக மாநாட்டிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநாட்டிலேயே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்: நீதிமன்ற வளாகம் 'லாக்':
இந் நிலையில் சென்னையில் நேற்றிரவு கைதான 7 வழக்கறிஞர்கள் புழல் சிறையிலும் இன்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் சட்ட விரோதம் என்றும் அவர்களை கோர்ட் வளாகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் நேற்றிரவு நீதிமன்றத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்த 7 வழக்கறிஞர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஆனால், இன்று சிறையிலும் இவர்கள் 7 பேரும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்தை போலீசார் பூட்டு போட்டு மூடினர்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற முயன்றனர். அப்போது வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அருகில் மெட்ராஸ் பார் கவுன்சில் அலுவலகம் முன் 4 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications