அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கட்டி-ரயிலைக் கவிழ்க்க சதியா?
சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கலவையால் ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரக்கோணத்திலிருந்து இன்று அதிகாலையில் ஒரு ரயில் என்ஜின் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த என்ஜின், பட்டாபிராம் ரயில் நிலையத்தை கடந்தபோது திடீரென எதுவோ குறுக்கிட்டது போல உணர்ந்தார் என்ஜின் டிரைவர்.
இருளாக இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் ரயில் நிலைய மேலாளருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார், மோப்ப நாய் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சோதனையிட்டனர்.
அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் கட்டி கிடந்ததைப் பார்த்தனர். அதன் மீதுதான் அந்த என்ஜின் ஏறி இறங்கியுள்ளது. இதை யார் இங்கு கொண்டு வந்து கொட்டியது என்பது தெரியவில்லை. மீதமான சிமென்ட் கலவையை வீடுகள், கட்டடங்கள் கட்டும் இடத்தில் போட்டு வைப்பது போல தண்டவாளத்தில் கொண்டு வந்து கட்டியுள்ளனர்.
இந்த சிமென்ட் கட்டி பெரிதாக இல்லை. மேலும், அது நன்கு இறுகாமலும் இருந்ததால் என்ஜின் தப்பியது. பெரிதாக இருந்து, இறுகி கான்க்ரீட் ஆகியிருந்தால் என்ஜின் கவிழ்ந்திருக்கும்.
எனவே இது சதிச் செயலா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications