தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்

பாலக்கோடு, பென்னாகரம், சீரியப்பட்டி, எழுமல் மந்தை உள்ளிட்ட கிராமங்களில் இந்த திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து அமுதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அனைத்துத் திருமணங்களையும் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று சம்பந்தப்பட்ட சிறுமிகளையும், சிறுமிகளின் பெற்றோர்களையும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அனைவருமே 16 வயதைக் கூடத் தாண்டாத சிறுமிகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களின் திருமணங்களை நடத்த பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட 11 சிறுமிகளும் தங்களது படிப்படைத் தொடர மாவட்ட நிர்வாகம் உதவும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
18 வயது நிரம்பாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோர்களை எச்சரித்த அதிகாரிகள், இந்த முயற்சிகளை கைவிடுமாறும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பெண் சிசுக் கொலைக்கு மட்டுமல்லாமல் சிறார் திருமணங்களுக்கும் பெயர் போனது தர்மபுரி மாவட்டம். கடந்த 6 மாதங்களில் மட்டும் அரசுக்குத் தெரியாமல் 35 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், பல குழந்தைத் திருமணங்கள் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரே சமயத்தில் 11 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications