இந்தியா வந்து சேர்ந்தது காமன்வெல்த் போட்டி ஜோதி
அமிர்தசரஸ்: க்வீன்ஸ் பேட்டன் என அழைக்கப்படும் காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி உலக நாடுகளில் வலம் வந்த பின்னர் இறுதியாக, பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
அடுத்த நூறு நாட்களுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்டு உறுதியில் காமன்வெல்த் போட்டி நடைபெறும் டெல்லியை வந்தடையும்.
வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்த காமன்வெல்த் ஜோதியை காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் கமிட்டித் தலைவரான சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அவரிடம் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத் தலைவர் சையத் ஆரிப் ஹசன் ஒப்படைத்தார். எல்லையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது காமன்வெல்த் போட்டி சம்மேளனத் தலைவர் மைக் பென்னலும் உடன் இருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஜோதி ஓட்டத்தை இங்கிலாந்து ராணி எலிசெபத், பக்கிங்காம் அரண்மனையில் தொடங்கி வைத்தார். அப்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உடன் இருந்தார்.
71 நாடுகளில் 1,90,000 கிலோமீட்டர் பயணித்து காமன்வெல்த் ஜோதி இந்தியாவை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க்வீன்ஸ் பேட்டன்...
க்வீன்ஸ் பேட்டன் என்பது 71 சிறிய விளக்குளைக் கொண்டுள்ள ஜோதியாகும். காமன்வெல்த் அமைப்பில் 71 உறுப்பினர்கள் இருப்பதை சித்தரிக்கும் வகையில் இந்த 71 விளக்குகளும் ஜோதியின் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். ஜோதி பயணிக்கும் வழியெல்லாம் இது படமாக எடுத்துக் கொண்டே வரும். மேலும், ஜோதி எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை அறிவதற்காக பேட்டனில், ஜிபிஎஸ் சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம ஜோதியின் பயணத்தை காமன்வெல்த் போட்டி இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
அலுமினியம், 18 கேரட் தங்கம் ஆகியவற்றால் ஆன பேட்டன் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications