பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்
நெல்லை: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது.
இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,
பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது.
இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications