தென் மேற்குப் பருவ மழையில் பற்றாக்குறை-விரைவில் வலுக்கும் என அதிகாரிகள் தகவல்

இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை சற்றுதாமதமாகவே தொடங்கியது. அதேசமயம், போதிய மழையும் இதுவரை பெய்யவில்லை. இடையில் இரு புயல்கள் குறுக்கிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் 1ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையிலான கால கட்டத்தில், 109.6 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 97.4 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.
இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்றுகூறியுள்ள வானிலை மைய அதிகாரிகள், வரும் நாட்களில் மழை நன்றாக பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்து வரும் 3 நாட்களில் பீகார், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தென்மேற்கு பருவ மழை கணிசமாக பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலைகள் வலுத்துள்ளதால் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications