பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஆதரவை வாபஸ் பெற வேண்டும்-ஜெ.
சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். இதை மத்திய அரசு செய்யத் தவறும்போது, ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட விலையின் கூடுதல் சுமையை திமுக அரசு ஏற்க முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
பெட்ரோல், டீசல், காஸ், கெரசின் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு தற்போது பெட்ரோலின் விலையை 3 ரூபாய் 50 பைசா அளவிற்கும், டீசலின் விலையை 2 ரூபாய் அளவிற்கும், எரிவாயுவின் விலையை 35 ரூபாய் அளவிற்கும், மண்ணெண்ணெயின் விலையை 3 ரூபாய் அளவிற்கும் உயர்த்தி ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல் இத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, பெட்ரோல் உயர்வு மீதான கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டது.
அதாவது, இனிமேல் சர்வதேச சந்தைகளின் விலைக்கு ஏற்ப, லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; டீசல் விலையைப் பொறுத்தவரை, இது பற்றிய முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்திவிட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மூலம் விலைவாசியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
இதைவிட ஒரு கொடுமை எதுவும் இருக்க முடியாது. வாக்களித்த மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறது.
எனவே, மத்திய அரசால் எவ்வளவு விலை ஏற்றப்பட்டதோ, அந்த அளவுக்கு மாநில விற்பனை வரியை குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பினையடுத்து, ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவ-மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பொதுவாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது, ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெயின் விலை உயர்த்தப்பட மாட்டாது. இந்த முறை அதையும் விட்டு வைக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால், ஏழை எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வையும், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டினை நீக்கியதையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு;
இதை மத்திய அரசு செய்யத் தவறும் பட்சத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக அரசின் முதல்வர் கருணாநிதி விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கூடுதல் சுமையை அரசு ஏற்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications