பஸ்-கார் மோதல்: டி.வி பெண் செய்தி வாசிப்பாளர் பலி
மதுரை: மதுரை அருகே நான்கு வழிச் சாலை சந்திப்பில் பஸ்சும் காரும் மோதிக் கொண்டதில் டி.வி. பெண் செய்தி வாசிப்பாளர் பலியானார். அவரது கணவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த அப்துல் வகாப் (45) விமான நிலைய பொறியாளராக உள்ளார். இவரது மனைவி கற்பகம் (40) தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.
தென்காசியில் நாளை நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஒரு காரில் சென்றனர்.
மதுரைக்கு கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி விலக்கு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் கார் சென்றபோது மதுரையில் இருந்து சென்ற பஸ்சுடன் மோதியது.
இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கார் பாகங்களை உடைத்து காயமடைந்து மயங்கி கிடந்த அப்துல் வகாப், அவரது மகள் நிஷா (17), மகன் ஆசிக் (11), கற்பகத்தின் சித்தி ரோஜா (34), உறவினர் கெளரி (15), முகம்மது மைதீன் (18), அஜ்மீர் அலி, கார் டிரைவர் அசன் மைதீன் ஆகியோர் மீட்கப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கற்பகம் தலையில் பலத்த அடிபட்டு இறந்து போன நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை-சாலை விபத்தில் திமுக முன்னாள் செயலர் பலி:
இந் நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் என்.எஸ். ராஜன் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க காரில் வந்தார்.
கோவையையடுத்த ஈச்சனாரி அருகே லாரியும், காரும் மோதிக் கொண்டதில் ராஜன், அவருடன் பயணம் செய்த நண்பர், டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications