விஷமத்தனமாக சயீத் பேசுவதை தடை செய்ய முடியாது-பாக்.
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக ஜமாத் உத் தவா (லஷ்கர் இ தொய்பாவின் மறுபெயர்) தலைவரான ஹபீஸ் சயீத் பேசி வருவதை தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளை இந்த சயீத். ஆனால் இவன் மீது பாகிஸ்தான் அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவிடமும் இவனை ஒப்படைக்க முடியாது என்று கூறி வருகிறது. இதன் காரணமாக சயீத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தைரியமாகவும், பகிரங்கமாவும் எச்சரிக்கை விடுத்து துவேஷமாக பேசி வருகிறான்.
இதுகுறித்து இந்தியா பாகிஸ்தானிடம் தனது கவலையையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூ்த் குரேஷி கூறுகையில், ஒரு ஜனநாயக நாட்டில், பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அது உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு விதமாக பேசத்தான் செய்வார்கள். அதையெல்லாம் தடுக்க முடியாது.
தீவிரவாதப் போக்குடன் செயல்படுபவர்கள், பேசுபவர்கள் இரு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், இதுபோன்ற கருத்துக்களுக்கு இரு நாடுகளையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.
இரு நாடுகளையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற தீவிரவாத கருத்துக்களை ஆதரிப்பதில்லை. அது நமக்கு ஆறுதலான விஷயம். அமைதி நிலவ வேண்டும், வளர்ச்சி அடையா வேண்டும், இயல்பு நிலை நிலவ வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications