எலுமிச்சை விலை சரிவு:கவலையில் விவசாயிகள்
புளியங்குடி: எலுமிச்சை விலை சரிவால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையாலும், குற்றால சீசன் துவங்கியுள்ளதாலும், புளியங்குடியில் எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆயிரம் பழங்கள் ரூ.400க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. புளியங்குடியில் எலுமிச்சைக்கென்று பிரத்யேகமாக மார்க்கெட் உள்ளது.
புளியங்குடி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் எலுமிச்சம் பழங்கள் இங்குள்ள 29 கடைகள் மூலம் ஏலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரலில் ஆயிரம் பழங்கள் ரூ.3000 வரை விற்பனையானது.
அதன்பிறகு ரூ.2000க்கு குறையாமல் விற்று வந்த எலுமிச்சம் பழங்கள் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், குற்றால சீசன் தொடங்கியுள்ளதாலும் கடந்த வாரம் ஆயிரம் பழங்கள் ரூ.1500 வரை விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 27-ம் தேதி கேரளாவில் பந்த் நடந்தது. இதனால் கேரளாவுக்கு செல்லும் எலுமிச்சம் பழங்கள் தடைப்பட்டு எலுமிச்சை விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. நேற்று புளியங்குடி மார்க்கெட்டுக்கு வந்த எலுமிச்சம் பழங்கள் அதிகபட்சமாக ஆயிரம் பழங்கள் ரூ.400க்குதான் விலை போனது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications