ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்!

கனகபுரா ரோட்டில் உள்ள இந்த ஆசிரமத்தில் கடந்த மாதம் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிரமத்தில் ரவிசங்கர் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்ற பி்ன்னர் வானிலிருந்து வந்த குண்டு அங்கு நின்றிருந்த வினய் என்பரின் தொடையை உரசிச் சென்றது.
இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்று ரவிசங்கர் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவிசங்கருக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது.
ஆனால், இது ஆசிரமத்தில் நடக்கும் கோஷ்டிப் பூசலால் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்று கூறி போலீசார் பிரச்சனையை மேலும் குழப்பினர்.
இந் நிலையில் ஆசிரமத்தை ஒட்டியுள்ள பண்ணை வீட்டைச் சேர்ந்தவர் நாய்களை விரட்ட வானை நோக்கி சுட்டபோது, குண்டு தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து விவரம் பி்ன்னர் தெரியவந்தது. இருந்தாலும் ரவிசங்கருக்கு பாதுகாப்பு தொடர்கிறது.
இந் நிலையில் இப்போது ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியிடுவேன் என்ற எச்சரிக்கையோடு ரூ. 42 கோடி கேட்டு ரவிசங்கருக்கு மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது.
நேற்று ஆசிரமத்தின் செயலாளர் கிஷோர் பிரசாத், துணை மேலாளர் ரவி கெளடா ஆகியோருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய ஒரு நபர் ரூ. 42 கோடி கேட்டு மிரட்டினார்.
இரண்டு தொலைபேசிகளில் இருந்து பேசியுள்ள அவர் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பேசியுள்ளார். பணம் தராவிட்டால் ஆசிரமத்தில் நடக்கும் சில விவகாரங்களை அம்பலப்படுத்துவேன், ரகசியங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாகவே இப்படி மிரட்டல் வருவதாகவும், ஆனால் இப்போது தான் ஆசிரமம் தலகட்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
புகாரை பதிவு செய்ய ஆசிரமம் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது என்று தெரியவில்லை.
மத்திய அரசிடம் நீண்ட காலமாகவே தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு வருகிறார் ரவிசங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications