ரூ. 165 கோடியில் 7 நகராட்சிகளில் குடிநீர் திட்டங்கள்: ஸ்டாலின் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இன்று தலைமைச் செயலகத்தில் ஜெர்மானிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் அதிகாரம் அளிக்கும் குழுவின் 2-வது கூட்டம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, பள்ளிப்பாளையம், உதகமண்டலம், கரூர், இனாம் கரூர், கடையநல்லூர் மற்றும் தாந்தோணி ஆகிய நகராட்சிகளில் ரூ.165 கோடியே 32 லட்சம் செலவில் 7 புதிய குடிநீர் திட்டப்பணிகளைச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி இக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அதில் 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 497 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டு நடந்து வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் (பொ) ஆர். ராஜ கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ககன்தீப் சிங்பேடி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே. பணீந்தரரெட்டி, நிதித்துறை கூடுதல் செயலர் ஆர். கிர்லோஸ் குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. செந்தில்குமார், பேரூராட்சிகள் இயக்குநர் த. ராசேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications