கேரள முதல்வர் அச்சுதானந்தனின் டெலிபோன் பில் ரூ.12 லட்சம்!
திருவனந்தபுரம்: கடந்த நான்கு ஆண்டுகளில் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் தொலைபேசிக்காக ரூ. 12 லட்சம் பில்லாக கட்டப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டபேரவையில் எதிர்கட்சி உறுப்பினர் சிபி முகமது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொலைபேசி செலவு குறித்த விபரங்களை கேட்டார்.
அதற்கு முதல்வர் அச்சுதானந்தன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது...
கடந்த நான்கு ஆண்டுகளில் அச்சுதானந்தன் தொலைபேசிக்காக செலவு செய்த தொகை ரூ.12.24 லட்சமாகும்.
கல்வி மற்றும் கலாச்சாரதுறை அமைச்சர் எம். ஏ. பேபி 8.28 லட்சமும், மின்சார துறை அமைச்சர் ஏ. கே. பாலன் 7.72 லட்சமும், சுகாதார துறை அமைச்சர் பி. கே. ஸ்ரீமதி 7.60 லட்சமும், உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் 7.29 லட்சமும், நீர்பாசனதுறை அமைச்சர் என். கே. பிரேமசந்திரன் 7.25 லட்சமும் செலவு செய்துள்ளனர்.
தேவசம் போர்டு அமைச்சர் கடந்தபள்ளி ராமசந்திரன் மிகவும் குறைவாக ரூ.73 ஆயிரத்து 901 செலவு செய்துள்ளார்.
செல்போனில் பேசியதில் நீர்பாசனதுறை அமைச்சர் எம். கே. பிரேமசந்திரன் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.07 லட்சம் செலவு செய்துள்ளார்.
அமைச்சர் எம். கே. பேபி 94,833 ஆயிரமும், நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் 90,724 ரூபாயும் செலவு செய்துள்ளனர் என்று அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications