நெல்லை மருத்துவ கல்லூரியில் பன்றிக் காய்ச்சல் சோதனை மையம்
நாகர்கோவில்: தமிழகத்தில் 30 ஆயிரம் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இவற்றை டாக்டர்கள், மற்றும் நர்சுகளுக்கு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்படுவதை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் நேற்று நாகர்கோவில் வந்தார். பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகர்கோவிலில் 5 இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நல உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரிகள் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைக்கான உபகரணங்கள் வாங்கப்படும்.
நெல்லை மருத்துவ கல்லூரியில் இன்னும் ஒரு வாரத்தில் பன்றிக் காய்ச்சல் சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவை பயப்படும் அளவில் இல்லை. எப்போதும் உள்ள சாதாரண காய்ச்சல்தான்.
குமரி மாவட்டம் உட்பட கடற்கரை கிராமங்களில் பூச்சி மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 20 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட உள்ளது. பன்றிக் காய்ச்சல் தென்பட்டவர்களுக்கு சிகி்ச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் அது தொற்றிக் கொள்வதால் முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் இறப்பு எதுவும் நிகழவில்லை. பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியின் விலை ரூ. 350. தனியாரிடம் இந்த தடுப்பு மருந்து கிடைப்பதில்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications