அரசு அலுவலர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி ஓய்வு பெற்றார்-புதிய தலைவர் சண்முக ராஜன்
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி அரசுப் பணியிலிருந்தும், சங்கத் தலைவர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக சண்முகராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 14 வருடங்களாக சூரியமூர்த்தி சங்கத் தலைவர் பதவியில் இருந்து வந்தார். தீவிர அதிமுக அனுதாபியாக அறியப்பட்டவர் சூரியமூர்த்தி. அதற்கேற்ப கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அரசு ஊழியர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டபோது கூட அரசு ஊழியர்களுக்காக தீவிரமாக இவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போதைய திமுக அரசு பதவியேற்றதும் தனது நிலையை மாற்றிக் கொண்டார் சூரியமூர்த்தி. கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள இழந்த சலுகைகளை மீண்டும் பெற தீவிர முயற்சி மேற்கொண்டார். சமீபத்தில் சென்னையில் அரசு ஊழியர்கள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி அறிவிக்கும் பெருவிழா என்ற பெயரில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கருணாநிதி, சூரியமூர்த்தியை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நிலையில், நேற்று சூரியமூர்த்தி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய சங்கத் தலைவராக சண்முகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications