தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை வருகிற 16ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை வருகிற 16ம் தேதி வரை பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் பார்வையிடலாம்.
அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் மண்டல அலுவலகம் உள்பட வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டு அதில் திருத்தம் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம்.
புகைப்படம், பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள அதிகாரிகளிடம், 6, 7, 8, 8ஏ ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கலாம். 16 ந்தேதிவரை மட்டுமே விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications