கருணாநிதி, ஸ்டாலின், டிஜிபிக்கு மிரட்டல்: நெல்லையில் இருவர் கைது
நெல்லை: முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய 2 பேரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை வெடிகுண்டு வைத்து கொலை செய்யப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
நெல்லையைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவரின் பெயரில் வந்த இந்த கடிதம் குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் நாகூர் மீரான் நெல்லையில் கல் குவாரி நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது உறவினரான இக்பால் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நாகூர் மீரானிடம் பணம் கேட்டுள்ளார். மீரான் தர மறுக்கவே, அவரை சிக்கலில் மாட்ட திட்டமிட்டார் இக்பால்.
அவரும் உறவினரான அகமது ரகமதுல்லாவுடன் இணைந்து நாகூர் மீரான் தனது கல்குவாரியில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் வெடிகுண்டு அனுப்பி வருவதாகவும் கடிதம் எழுதி போலீசுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் இவர்களே முதல்வர், துணை முதல்வருக்கு மிரட்டல் விடுத்து மீரானின் பெயரில் கடிதம் அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இக்பால் மற்றும் அகமது ரகமதுல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications