வகுப்புக்குள் வர தடை விதிக்கப்பட்டதால் பி.இ மாணவன் தற்கொலை
அரக்கோணம்: வகுப்புகளுக்கு வர பேராசிரியர் அனுமதி மறுத்து வெளியே நிற்க வைத்ததால் வேதனை அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணத்தை சேர்ந்த ரகுநாத்செட்டியார் மகன் சந்திரசேகர் (22). பெற்றோர் இல்லை. இதனால் தனது மூத்த சகோதரி டாக்டர் திவ்யா மணிகண்டன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். சந்திரசேகர் சரிவர கல்லூரிக்குப் போவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் டாக்டர் நித்யாவை அழைத்து கண்டித்துள்ளது. இதையடுத்து இனிமேல் சரியாக வருவான் என்று கூறி டாக்டர் நித்யா கல்லூரி நிர்வாகத்திடம் உறுதியளித்து மீண்டும் சேர்த்துள்ளார்.
இதையடுத்து சந்திரசேகர் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் பேராசிரியர் அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே நிறுத்தியுள்ளார். அடுத்த நாளும் அதேபோலவே செய்யவே மனம் உடைந்தார் சந்திரசேகர்.
இதையடுத்து வீடு திரும்பிய அவர்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு தனது சகோதரிக்கு ஒருகடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், நான் இந்த உலகத்தில் இனி வாழ விரும்பவில்லை. இதுவரை உனக்கு கொடுத்து வந்த கஷ்டத்துக்கு மன்னிக்கவும், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க 2 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்னை போல பலர் இது போல இறந்து போவார்கள் என்று கூறியிருந்தார்.
கல்லூரி நிர்வாகம் மீது சந்திரசேகரின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications