என்எல்சி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து வேலைக்குப் போகவில்லை. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதித்து, தென் மாநிலங்கல் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி முதல் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரமும், அதன் விரிவாக்க மின் நிலையத்தில் 420 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1,470 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 600 மெகாவாட்டும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. மற்ற இரு மின் நிலையங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 42 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், 43 சதவீதம் இதர தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. மீதி 15 சதவீதம் மத்திய தொகுப்புக்குப் போகிறது.
தற்போது 3 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதால், மின் உற்பத்தி இப்போதைக்கு நடக்கிறது. ஆனால் வேலைநிறுத்தம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கலாகி விடும்.
இந்த நிலையில் பிரச்சினையை தீர்த்து ஸ்டிரைக்கை முடிவுக்குக்கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை நேற்று ஜெய்ஸவாலை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜா ஒப்படைத்தார்.
கடிதத்தில், தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்கனவே நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்று ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்ஸ்வால் பேசுகையில், என்.எல்.சி. தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே மீண்டும் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்னும் 2 நாளில் சுமூகத்தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications