அன்னிய நேரடி முதலீடு 5.6 சதவீதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்த ஆண்டு மே மாதத்தில் நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் முதலீடுகள் சரிவடைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் ரூ.9,600 கோடியாக இருந்தன. இது இந்த மே மாதத்தில் ரூ.10,200 கோடியாக அதிகரித்துள்ளது.
2008ம் ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக அன்னிய முதலீடுகள் சரிந்தன.
சென்ற நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 38 சதவீதம் சரிவடைந்திருந்திருந்தது.
இந் நிலையில், உலக அளவில் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதைக் காட்டும் வகையில் இப்போது அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications