முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு-நாளை தவ்ஹீத் ஜமாத் பேரணி
சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை (ஜூலை 4) சென்னையில் பேரணி நடத்தப்படுகிறது.
இது குறித்து அதன் தலைவர் எம்.ஏ.பக்கீர் முகம்மத் அல்டாபி கூறுகையில்,
உரிய இட ஒதுக்கீடு இல்லாததால் சமுதாயத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் உரிய கல்வித் தகுதி இருந்தும் தகுதியான பணிகளில் அமர முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.6 சதவீதம். ஆனால், சிறுபான்மையினர்களில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது.
முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரை இன்றளவும் சட்டமாக்கப்படவில்லை. இந்தக் கமிஷனின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.
இதை நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை தீவுத்திடலில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications