சஞ்சய் காந்தியை விட ராஜீவ் ஒன்றும் நல்லவரல்ல-அச்சுதானந்தன் மீண்டும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
ஆலப்புழை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கேரள முதல்வர் அச்சுதானந்தன் மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.
சமீபத்தில் ராஜீவ் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார் அச்சுதானந்தன். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் ராஜீ்வை விமர்சித்துள்ளார் அச்சுதானந்தன்.
ஆலப்புழை அருகே நடந்த கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
போபால் விஷவாயு ஆலை அதிபர் ஆன்டர்சன் தப்பி செல்வதற்கு உதவியதே ராஜீவ்காந்திதான். சஞ்சய் காந்தியை விட ராஜீவ்காந்தி ஒன்றும் நல்லவர் அல்ல என்று கடுமையாக தாக்கினார்.












Click it and Unblock the Notifications