சென்னையில் 9 விமானங்கள் ரத்து-மும்பையில் 86 ரத்து!
Subscribe to Oneindia Tamil

சென்னையிலிருந்து இன்று காலை கொச்சி, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, மங்களூர் செல்ல விமானங்கள் தயாராக இருந்தன. ஆனால், போதிய பயணிகள் வரவில்லை.
மேற்குவங்கம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இன்று பாரத் பந்த் முழு அளவில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்குச் செல்ல இருந்த பெரும்பாலான பயணிகள் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டனர்.
இதையடுத்து இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications