திமுக-காங் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்: பாஜக
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக பாஜக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி விட்டோம். நானும், இல.கணேசனும் விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம்.
அப்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக தமிழ்நாட்டில் 69 இடங்களில் போராட்டம் நடத்தியது. 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து மக்களுக்காகப் போராடும்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். நாங்கள் யாருடன் கூட்டணி சேர்வது என்று இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. எந்தக் கட்சியும் இதுவரை எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை.
தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே அவர்களை எதிர்க்கும் வகையில் மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டியது அவசியம்.
சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. அதுபோல இந்து மாணவ- மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இதை வற்புறுத்தி நாளை சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் கூட மத மாற்றம் புகுத்தப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அமல்படுத்த, மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications