குற்றாலத்தில் கொட்டமடிக்கும் குடிகாரர்கள்-குளிக்க அஞ்சும் பெண்கள்
குற்றாலம்: குடிகாரர்களின் அட்டகாசத்தால் குற்றாலத்தில் அமைதியாக குளிப்பவர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையின் உச்சியில் பிறந்து மூலிகை செடிகளுக்கு இடையே தவழ்ந்து விழும் குற்றால அருவிகள் நோய் தீர்க்கும் குணமுடையது என இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தாரும், ஏன் வெளிநாட்டினரும் கூட குற்றாலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு வந்து நீராடி செல்கின்றனர்.
மலை மீதுள்ள மூலிகைகளை அருவி நீர் தழுவிக்கொண்டு வருவதால் மூலிகை சத்து கலந்த நீர் உடலுக்கு புத்துணர்வை தருகிறது. நீரின் வேகம் மின்சார அணுக்களை தோற்றுவிக்கிறது.
நீராடுபவர்களுக்கு செரிமானம் ஏற்பட்டு நல்ல பசியும் ஏற்படுகிறது. தோல் நோயுள்ளவர்கள் வாரக்கணக்கில் இங்கு தங்கி நீராடி வந்தால் நோய்கள் தீரும் என்பது நீண்ட கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் குடிப்பதற்காகவே பலர் குற்றாலத்திற்கு வருகின்றனர்.
பல இளைஞர்கள் நீண்ட தூரம் பைக்குகளில் பயணித்து வருகிறார்கள். வரும்போதும், போகும்போதும் இவர்கள் போதையிலேயே பயணிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விபத்துகளில் உயிர் பலி அதிகரிக்கிறது. இவர்களுக்கு போதை தெளியும் வரை மருத்துவ சிகிச்சை அளிப்பது கடினம்.
கட்சி கொடிகளுடன் காரில் வந்து கறைவேட்டியுடன் அருவிகளில் குடித்து விட்டு ஆட்டம் போடுவோரை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் தடுமாறுகின்றனர். நான் யார் தெரியுமா, அவருக்கு நான் யார் தெரியுமா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல தெரியாமல் போலீசார் பல சமயங்களில பணிந்து போக வேண்டியுள்ளது.
குடித்து விட்டு ஆட்டம் போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேல்மட்ட அதிகாரிகள் உத்தரவிட்டாலும் கூட பல நேரங்களில் அதை காற்றில் பறக்க விட வேண்டியுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications