என்எல்சி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது-நள்ளிரவு முதல் பணிக்குத் திரும்பினர்
சென்னை: கடந்த 5 நாட்களாக நடந்து வந்த என்எல்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஊழியர்களின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் கால்வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து நிர்வாகத்திற்கும், தொழிலாளர் பிரதிநிதிகளான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்களுக்கு இடையே, சென்னையில் மண்டலத்தொழிலாளர் நல ஆணையர் ஜெகன்னாத ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
4 முறை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5வது கட்டப் பேச்சுவார்த்தை நெய்வேலி இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளான கூடுதல் ஊக்கத் தொகை, பணிக்கொடை, அலவன்ஸ் ஆகியவற்றை ஏற்பதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை சுபமாக முடிந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications