அடு்த்த வாரம் முதல் சர்வதேச விலையில் தான் பெட்ரோல்-டீசல்!

10 நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது.
ஆனால், என்று முதல் இந்த அரசு கட்டுப்பாட்டில்லாத விலை அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.73 உயர்த்தியது மத்திய அரசு. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.35ம் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையில், அதை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேகவேகமாக வகுத்து வருகின்றன.
இது குறித்து ஆலோசிக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தினந்தோறும் மாறுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தினந்தோறும் ஒரு விலைக்கு பெட்ரோல், டீசலை விற்க முடியாது என்பதால், வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ புதிய விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது.
வரும் 14ம் தேதிக்குள் இந்த விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கிவிடுவோம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 14ம் தேதிக்குப் பின் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலையை பிரதிபலிக்கும் வகையில் மாறலாம்.
இதனால் தங்கம்-வெள்ளி விலை நிலவரம் மாதிரி இனி பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் குறித்தும் இனி வாரவாரம் மத்திய பெட்ரோலியத்துறையும் எண்ணெய் நிறுவனங்களும் செய்திக் குறிப்புகள் வெளியிடும் நிலை வரலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications