நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
நெல்லை: கொலை வழக்கு விசாரணைக்காக நெல்லை நீதிமன்றத்தில் நேற்று 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் கடந்த 13-1-2001 அன்று சர்வோதயபுரியை சேர்ந்த கோட்டார் என்ற சின்னதுரை ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு நீதிபதி பிரபுதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக அப்போதைய திருச்செந்தூர் டி.எஸ்.பி.யும், தற்போதைய மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டருமான அங்கமுத்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதேபோல் கடந்த 1998-ம் ஆண்டு முறப்பநாட்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அப்போதைய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.யும், தற்போதைய நெல்லை டி.ஐ.ஜி.யுமான சண்முக ராஜேஸ்வரன், மதுரை டி.ஐ.ஜி மித்தேல் ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
கடம்பூரில் நிலத்தகராறில் புஷ்பவள்ளி என்ற பெண்ணை வீடு புகுந்து ஜாதி பெயர் சொல்லி முனியசாமி என்பவரும் அவரது மனைவி் முருகலட்சுமியும் அரிவாளால் வெட்டிய வழக்கு தொடர்பாக அப்போது அங்கு ஏ.எஸ்.பி.யாகவும், தற்போது ஊட்டி எஸ்.பி.யாகவும் பணியாற்றி வரும் கபில் சரத்கரும் நேற்று மாவட்ட தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அரசு வழக்கறிஞர் கலைசெல்வன் அவரிடம் விசாரணை நடத்தினார்.
ஒரே நாளில 2 டி.ஐ.ஜி.க்கள், 2 எஸ்.பி.க்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நீதிமன்ற வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications