மீனவர் படுகொலை: நாளை இலங்கை தூதரகம் முன்பு தி்முக மீனவர் அணி ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையினரால் நாகை மாவட்ட மீனவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நாளை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு திமுக மீனவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மீனவர் அணி செயலாளர் இரா.பெர்னார்டு இதுகுறித்து கூறியுள்ளதாவது:

7-7-2010 அன்று இரவு கடலில் மீன்பிடிக்கச்சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் நடைபெறுவது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு பல முறை கடிதங்கள் மூலமாகவும், முதல்-அமைச்சர் கருணாநிதி மூலமாகவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும், இந்தக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தகையை நடவடிக்கையை தி.மு.க. மீனவர் அணியின் சார்பில் கண்டிப்பதோடு-மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கையை கடுமையாக எடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து சனிக்கிழமை காலை 10 மணி அளவில் இலங்கை தூதரகத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அறப்போரில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+