For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் தமிழர் அமைப்பு சார்பி், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் தொண்டர்கள், பிரபாகரன் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சீமான் ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில்,

ஐ.நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள்.

இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக.

ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

முன்னதாக நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் கடைசிக் கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்ய ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ரஷியா ஆதரவு அளித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கைக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு இலங்கை மறுக்கிறது. அங்குள்ள அமைச்சரும் போராட்டம் [^] நடத்துகிறார். விசாரணைக்கு மறுப்பதில் இருந்தே போர் குற்றம் நிகழ்ந்தது நிரூபணம் ஆகிறது. இந்த விஷயத்தில் ஐ.நா. பின்வாங்கக் கூடாது. இலங்கை அரசு மீது நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக ரஷியாவும் செயல்படுகிறது. இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு யாரும் துணை போகக்கூடாது. இந்த வேண்டுகோளை வைத்து ரஷிய துணை தூதரகத்தில் மனு கொடுத்துள்ளோம். அங்குள்ள அதிகாரிகளும் மேலிடத்திற்கு அனுப்ப ஆவன செய்வதாக கூறினார்கள்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுட்டுக் கொல்கிறார்கள். இதுவரை, 501 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு கடிதம் மூலம் தீர்வுகாண முடியாது. இலங்கையை பகை நாடாக கருதி இந்தியா போர் தொடுக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு விளையாட செல்லக் கூடாது. இலங்கை அணியும் இந்தியாவுக்கு விளையாட வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்றார் சீமான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X