நள்ளிரவிலும் உண்ணாவிரதம் இருந்த சத்துணவு ஊழியர்கள்
திருப்பூர்: தங்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்றும் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரியும் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவிலும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.
இந்த உண்ணாவிரத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பழனிசாமி, உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.
சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும் என்றும், அரசு ஊழியளர்களுக்கு வழங்குவதை போன்று முழுநேர பென்சன், பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் காய்கறி, மளிகை, எரிபொருளுக்கு ஒரு மாணவருக்கு வெறும் 44 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. அதை இரண்டு ரூபாய்க உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதம் கரூர், நாமக்கல், திருச்சி, உள்பட தமிழகம் முழுக்க நடைபெற்றது.












Click it and Unblock the Notifications