குற்றாலத்தில் அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உள்பட 4 பேர் கைது
குற்றாலம்: குற்றாலத்தில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றால சீசனின் போது அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரரூவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சித்திர சபை, ரத வீதி ஆகிய பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதில் ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மேலும் இருசக்கர வாகனங்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தும் அவற்றுக்கும் கட்டணம் வசூலிப்பதாகவும், சுற்றுலா பயணிகளிடம் இருந்து போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த வாரம் எஸ்.பி. ஆஸ்ரா கர்க் குற்றாலம் வந்து கார் பார்க்கிங் கட்டண வசூலை ஆய்வு செய்தார். அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அவர்களை எச்சரிக்கை செய்திருந்தார். மேலும், அந்த பகுதிகளில் சோதனையிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது பேரரூவி கார் பார்க்கிங் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரிடம் இருசக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கார் பார்க்கிங் குத்தகைதாரரான காசிமேஜர்புரத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் முருகன், மாடசாமி என்பவரின் மகன் குத்தாலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ஐந்தருவியில் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூலித்த சுப்பிரமணியன், இலஞ்சியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் குட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications