வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5% ஆக நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி விகிதம் 2010-11ம் ஆண்டில் 8.5 சதவீதமாகவே நீடிக்கும் என்று தெரிகிறது.
6 கோடி உறுப்பினர்களைக் கொண்ட பி.எப். வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழிலாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தின், நிதி மற்றும் முதலீடு கமிட்டி பரிந்துரைப்படி வட்டி விகிதம் 8.5 சதவீதமாகவே இருக்கும் என்று மத்திய வருங்கால வைப்பு நிதித்துறை ஆணையர் சட்டர்ஜீ கூறியுள்ளார்.
ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இயக்குனர் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
வருங்கால வைப்பு நிதியில் இப்போது மொத்தம் ரூ.3 லட்சம் கோடி நிதி உள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 8 சதவீத வட்டி வழங்கும்.












Click it and Unblock the Notifications