இலங்கை மீதான ஐ.நா. குழுவை இந்தியா ஆதரிக்க வேண்டும்-தா.பாண்டியன்
தர்மபுரி: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவிற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நில மோசடிகள், கொலை, கொள்ளை, விபத்துக்கள் போன்றவை அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு அலுவலகங்களில், ஆளும் திமுக கட்சியினர் தலையீடுகள் இருப்பதால், அரசுத் துறைகளால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
இது குறித்து சிவகங்கையில் வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் பரதன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் விரிவாக விவாதிக்கபடும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பீஹார், ஒரிஸா ஆகிய மாநிலங்களை காட்டிலும் பின் தங்கி 2.4 சதவீதமாக உள்ளது.
திருச்சியில் பாய்லர் தொழிற்சாலையுடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்து, மூன்றாண்டுகளில் எட்டு மின் நிலையங்கள் துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இது போன்ற முயற்சிகள் செய்யவில்லை. இதனால் தான் மின் பற்றாக்குறை உள்ளது.
தமிழகத்தில் 77 பொருளாதார மண்டலங்கள் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது 20 மட்டும் தான் செயல்பட்டு வருகிறது. பொருளாதார மண்டலங்களுக்காக தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு என்பதை அரசு விளக்க வேண்டும்.
வேலூரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவங்கி பத்தாண்டாகியும் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. இதற்கு தமிழக அரசு என்ன நவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1,900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த தொகை, முழுமையாக தமிழர்களுக்கு பயன்படுகின்றதா என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்கள் குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவிற்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்ட நிதி, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9- தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications