வன்முறையை தூண்டும்படி பேசவில்லை-சீமான்
சென்னை: வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் எதையும் பேசவில்லை என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவரது வக்கீல் வாதிட்டார்.
இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது பேசிய பேச்சுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த 10-ந் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக கூறப்பட்டுள்ள பேச்சுரிமை அடிப்படையில்தான் எனது கருத்துக்களை தெரிவித்தேன். இதில் எந்த சட்டமீறலும் இல்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று
கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் பேசவில்லை. எனவே அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து சீமான் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
சீமானுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று சீமானை விடுதலை செய்யக் கோரி,சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த இந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். சீமானை விடுதலை செய்யக்கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி சுமார் 20 நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications