ஜெ. மதுரை வருகை-விஷேச பூஜையுடன் கால்கோள் விழா!
சென்னை: கட்சி நிர்வாகிகளி்ன் இல்லத் திருமணங்களை நடத்தி வைக்க வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரை செல்கிறார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலளார் ஜெயலலிதா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22ம் தேதி மதுரை செல்கிறார். அன்று காலை 10.30 மணியளவில் மதுரை வட்டச் சாலை, பாண்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில், திண்டுக்கல் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விசுவநாதன் எம்.எல்.ஏ. மகன் திருமணம்,
தேனி ஒன்றியக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கணேசன் மகள் திருமணம், ஈரோடு புறநகர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கோவிந்தராஜா மகன் திருமணம்,
மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஓம்.கே.சந்திரன் மகன் திருமணம், பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் வீரபாண்டியன் மகன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கழக உடன் பிறப்புகளின் இல்லத் திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார் என்று கூறப்பட்டு்ள்ளது.
விஷேச பூஜையுடன் ரிங் ரோட்டில் கால்கோள் விழா:
இந் நிலையில் இந்த திருமண விழாக்களுக்காக மதுரை ரிங்ரோட்டில் மஸ்தான்பட்டி அருகே 4 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் நேற்று விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு கால்கோள் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், பேரவை மாநிலச் செயலாளர் நயினார் நாகேந்திரன், மாணவரணிச் செயலாளர் ஆர்.பி.உதயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் செல்லூர்ராஜு, நத்தம் விசுவநாதன், சிவசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications