பெருந்தலைவர் காமராஜரின் வாரிசு முதல்வர் கருணாநிதி: கனிமொழி
திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜரின் வாரிசாக திகழ்ந்து வரும் முதல்வர் கருணாநிதி, இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 99 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்திக் காட்டியுள்ளார் என்று ராஜ்யசபா திமுக எம்பி கனிமொழி கூறினார்.
திருநெல்வேலியி்ல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்த இந்த விழாவில் பேசிய கனிமொழி,
மதிய உணவு திட்டம் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது ஆட்சிக் காலத்தில் மதிய உணவு திட்டம் மூலம் 45 சதவீதமாக இருந்த பள்ளி மாணவர் சேர்க்கையானது 75 சதவீதமாக உயர்ந்தது.
அவர் வழியில் வந்த கருணாநிதி அந்த திட்டத்தைத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்.
காமராஜர் இறந்தபோது மழையில் நனைந்து கொண்டு இறுதிச் சடங்கு பணியில் ஈடுபட்டவர் கருணாநிதி. அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர், காமராஜருக்கு ஒரு வாரிசு இல்லை என்ற குறையை கருணாநிதி தீர்த்து வைத்துவிட்டதாகக் கூறினர்.
காமராஜரின் வாரிசாக திகழ்ந்து வரும் கருணாநிதி, இன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 99 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்திக் காட்டியுள்ளார்.
நாட்டில் பள்ளிக் கல்விக்கு மற்ற மாநிலங்களில் 3 முதல் 10 சதவீதம் வரையே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 20 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தைவிட 88 சதவீதம் அதிகம் ஆகும் என்றார் கனிமொழி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications