தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல்-அறிவித்த வேகத்தில் ரத்து
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் இம்மாதம் 20ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்த வேகத்தில் அதை ரத்து செய்துள்ளார் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியான ரவி மல்லு.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் இம்மாதம் 20-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தவர்கள் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட முடியாது என்றும் அவர் அறிவித்திருந்தார். தேர்தல் அட்டவணையையும் அவர் வெளியிட்டார். அதை தமிழக காங்கிரஸ் தேர்தல் ஆணையரான ரவி மல்லு வெளியிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் சில மணி நேரத்தில் ரவி மல்லுவிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறுவதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததின்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு தேர்தல் வேறு தேதிகளில் மாற்றி வைக்கப்பட உள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
தேர்தல் தேதிகளை முடிவு செய்து விட்டு, அதை காங்கிரஸ் தலைவரே அறிவித்தும் விட்ட பிறகு, போதி கால அவகாசம் வேண்டும் என்று அதே காங்கிரஸ் தலைவர் கூறியதால் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதால் கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications