ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், நஞ்சமகத்துவ வாழ்க்கை ஊராட்சி மன்றத் தலைவரிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் அருகே நஞ்சமகத்துவ வாழ்க்கை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் தனசேகர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.

இவரிடம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த மோகிசன், மகேஷ் மற்றும் பீமாராவ் ஆகியோர் தாங்கள் ஒரு வார இதழில் இருந்து வருவதாகவும், ஊராட்சி ஒன்றியத்தில் அதிக அளவு ஊழல் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த ஊழல்கள் வெளியே தெரியாமல் இருக்க தங்களுக்கு ரூ. 5 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, தலைவர் பதவிக்கு ஆபத்தை உண்டாக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மோகிசன், மகேஷ் மற்றும் பீமாராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+