ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட கருணாநிதி உத்தரவு
சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என பெயர் சூட்ட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென்று அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு எடுத்த முயற்சியின் காரணமாக ரூபாய் 77 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பேருந்து நிலையத்திற்கு பெருந் தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையினையேற்று முதல்வர் கருணாநிதி ராதாபுரம் பேருந்து நிலையம் என்று தற்போதுள்ள பெயரை பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என்று வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.
காமராஜர் பெயரை இந்தப் பேருந்து நிலையத்திற்கு வைக்க வேண்டுமென்று சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த சுடலைமுத்து மற்றும் சிவாஜி முத்துக்குமார் ஆகியோர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications