மொழிப் பிரச்சினை தீர்ந்ததால் உற்சாகம்-ஒரு மாதம் டெல்லியில் அழகிரி முகாம்

ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசுவதில் சிக்கல் ஏற்பட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களுக்குப் போகாமல் இருந்து வந்தார் மு.க.அழகிரி. இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின.
தான் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மு.க.அழகிரி விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற செயலகம், விதிமுறையைக் காரணம் காட்டி மறுத்து விட்டது.
இதனால் பெரும் இழுபறியாக இருந்து வந்தது அழகிரிப் பிரச்சினை. இந்த நிலையில் சமீபத்தில் புதிய தீர்வு ஒன்றை சபாநாயகர் மீரா குமார் வைத்தார். அதன்படி மெயின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலை எழுதி வைத்துக் கொண்டு அதை அழகிரி வாசிக்கலாம். துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இழுபறியாக இருந்து வந்த இந்த மொழிப் பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பது திமுகவுக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து வருகிற மழைக் காலக் கூட்டத் தொடரை அழகிரி தைரியமாக சந்திக்கவுள்ளார். மேலும் முழுத் தொடரிலும் பங்கேற்கவும் அவர் தீர்மானித்துள்ளார். அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் அழகிரி ஒரு முழுத் தொடரிலும் பங்கேற்கவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 26 ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இதில் அழகிரி பங்கேற்கிறார். கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் ஒரு மாதம் வரை அழகிரி டெல்லியில்தான் முகாமிட்டிருப்பார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications