தமிழகம் முழுவதும் பரவலாக மழை24 மணி நேரத்திற்கு நீடிக்கும்
தமிழகம் முழுவதும் பரவலாக மழை24 மணி நேரத்திற்கு நீடிக்கும்
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்த மாநிலங்களையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. இது போக வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்றுகாலை முதல் வானம் மேக மூட்டமாக இருக்கிறது. லேசான தூறல் பல இடங்களில் காணப்பட்டது.
இதேபோல தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், உட்புறப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது, பெய்து வருகிறது. இந்த மழை 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மழைக்கு 3 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழைக்கு 3 பேர் பலியானார்கள்.
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை மறைமலைநகரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு நந்தினி (வயது 9), ஜீவா (5) என்ற 2 மகள்கள். கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் இவரின் குடிசை சுவர் இடிந்தது. இதில் இவரின் மகள் நந்தினி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
குடியாத்தம் அடுத்த புட்டவாரிபல்லி ஜி.கே.ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (வயது 22), ராமலிங்கம் (45), நல்லாகவனியுரைச் சேர்ந்த சிங்காரம் (40), கொட்டாகுளம் சந்திரன் (47) ஆகியோர் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். மாலையில் வீடு திரும்பும் போது மழை பெய்ததால் காட்டுப் பகுதியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கி பச்சையப்பனும், ராமலிங்கமும் அந்த இடத்திலேயே கருகிச் செத்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications