ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2014ல் வெளியேற்றம்-சர்வதேச மாநாட்டில் முடிவு

இது தொடர்பாக நேற்று காபூலில் நடந்த சர்வதேச மாநாட்டில் அதிபர் ஹமீத் கர்சாய் வைத்த வேண்டுகோளை இந்த நாடுகள் ஏற்றுக் கொண்டுவிட்டன.
ஆப்கானிஸ்தான் படைகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு 2014ம் ஆண்டில் நேடோ படைகள் வெளியேறலாம் என்று கர்சாய் இந்த மாநாட்டில் தெரிவித்தார். இதை நேடோ ஒப்புக் கொண்டுவிட்டது.
நியூயார்க்கில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலையடுத்து தலிபான்களையும் அல்கொய்தாவையும் விரட்டியடித்து ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் அங்கு முகாமிட்டன. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ், உள்ளிட்ட நாட்டுப் படைகள் அடக்கம்.
இவர்களோடு வந்த ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் படைகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. இப்போது சுமார் 1.5 லட்சம் நேடோ படைகள் அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாதிகளை ஒடுக்க இந்தப் படையினர் போராடி வந்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கிடையே இராக்கில் நுழைந்து அந்த நாட்டையும் தீவிரவாதிகள் பிடிக்குள் தள்ளியது அமெரிக்கா.
இதனால் ஆப்கானி்ஸ்தான், இராக்கில் இருந்து இந்தப் படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மேற்கு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் பலமடைந்து வருகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறினால் அங்கு பாகிஸ்தான் ஆதரவுடனான தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் முழு அளவி்ல் தலைதூக்கும் ஆபத்து இருப்பதால் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அந்த நாட்டிலேயே இருந்தால் நல்லது என்று இந்தியா கருதுகிறது.
ஆனால், பேரிழப்பை சந்தித்துவிட்டதாலும், காட்டுமிராண்டிகள் போல செயல்படும் தலிபான்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிட்டாலும், மிக 'ஹை-டெக்காக' தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் அல்-கொய்தாவை அடக்க முடியாததாலும் ஆப்கானிஸ்தானை விட்டு முடிந்த அளவு சீக்கிரமே கிளம்ப அமெரிக்க முடிவெடுத்துவிட்டது.
இது குறி்த்து விவாதிக்க ஆப்கானிஸ்தான் சீரமைப்புக்கு உதவும் நாட்டுத் தலைவர்கள் மாநாடு காபூலில் நேற்று நடந்தது.
இதில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், 2014ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறலாம் என்று அதிபர் ஹமீத் கர்சாய் கோரிக்கை வைத்தார் (அல்லது இந்தக் கோரிக்கையை வைக்குமாறு அமெரிக்காவால் கோரப்பட்டார்).
இந்தக் கோரிக்கையை அமெரி்க்கா உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications