சிறுவனைக் கொன்றதாக கைதான பூவரசி மீது சிறையில் தாக்குதல்
சென்னை: சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக் காதலித்து வந்த பூவரசியை ஏற்க ஜெயக்குமார் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசி, ஜெயக்குமாரின் மூன்றரை வயது மகன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்து சூட்கேஸில் உடலை வைத்து புதுச்சேரியில் விட்டு விட்டு வந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.
இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications