ஏற்கனவே ஒரு ஆணிடம் ஏமாந்தவர் பூவரசி-கொலைக்குத் துணிந்த பரிதாபம்

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் காதலிதான் பூவரசி. ஆனால் அவர் பூவரசியை மணக்காமல் வெறும் உடல் ஆசைக்கு மட்டும் அவரை பயன்படுத்தி வந்துள்ளார். அதேசமயம், பூவரசியைப் போலவே தான் காதலித்த ஆனந்தலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளார். ஆனந்தி மூலம் ஜெயக்குமாருக்கு நிவேதிதா, ஆதித்யா (மூன்றரை) என இரு குழந்தைகள். இதில் ஆதித்யாவைத்தான் பூவரசி கொலை செய்து மாட்டியுள்ளார்.
ஜெயக்குமார் மூலம், பூவரசி இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அதைக் கலைத்துள்ளார் ஜெயக்குமார். தன்னை உடல் ரீதியாக மட்டுமே ஜெயக்குமார் நேசித்து வந்ததால், விரக்தி அடைந்துதான் கொலை என்ற படு பாதகத்திற்குத் துணிந்து விட்டார் பூவரசி.
அதேசமயம், அவர் ஏற்கனவே ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு, துயரப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பூவரசிக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள கம்பராஜபுரம் ஆகும். இவர் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்துள்ளார். அதை தொடர்ந்து சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்த சமயத்தில், கடந்த 2002-ம் ஆண்டு அவர் வாலாஜா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்,
நான் சிப்காட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சிப்காட் அருகே உள்ள செட்டித்தாங்கல் என்ற ஊரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த புதுச்சேரியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தேன். நாங்கள் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்து வந்தார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வாலாஜா கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோருடன் கோபித்துக்கொண்டு சென்னை வந்து விட்டார் பூவரசி. வந்த இடத்தில்தான் ஜெயக்குமார் விரித்த வலையில் விழுந்தார்.
முதல் காதல்தான் பொய்த்துப் போனது. 2வது காதலிலாவது வெல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதுவும் நீர்த்துப் போனதால்தான் இந்த கொலையைச் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
முதல் காதலன் மீது தொடர்ந்த வழக்கில் பின்னர் பூவரசி ஆஜராகவில்லை. அப்படியே அதை மறந்தும் விட்டாராம்.
பூவரசி குறித்து அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகையில்ல,
பூவரசி கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவர்ச்சி உடையில் தான் இருப்பார். அவருக்கு என்று தோழிகள் யாரும் கிடையாது. எப்போதும் துறுதுறுவென்று இருப்பார். கல்லூரிக்கு செல்லும் போது தனியாகதான் செல்வார். அது போல் கல்லூரியில் இருந்து வரும் போதும் தனியாகதான் வருவார்.
அவருக்கும் ஒரு வாலிபருக்கும் தொடர்பு இருந்தது ஊருக்குள் அனைவருக்கும் தெரியும். இதற்காக பூவரசியின் பெற்றோர்கள் அவரை கடுமையாக கண்டித்தனர். இதில் கோபித்துக் கொண்டு சென்னைக்கு சென்றார்.
பூவரசி இந்த அளவுக்கு ஒரு சிறுவனை கொலை செய்துள்ளதை நினைத்து பார்க்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றனர்.
தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை
இதற்கிடையே, சிறுவன் ஆதித்யாவைக் கொலை செய்வதற்கு முன்பு அவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார் பூவரசி என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையின்போது கொலை செய்யும்போது சத்தம் வராமல் இருப்பதற்காக குளிர்பானத்தில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் பூவரசி.
விசாரணையின்போது அடிக்கடி பூவரசிக்கு மயக்கம் வந்துள்ளது. போலீஸார் கொடுத்த சாப்பாட்டை நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். ஆனால் நேற்று காலை சாப்பிடவில்லை. அழுதபடியே இருந்தாராம். சாப்பிடாமல் இருந்தால் உடல் நலம் பாதிக்கும் என்பதால் போலீஸார் நேற்று மதியம் அவருக்கு கோழி பிரியாணி வாங்கிக் கொடுத்து சாப்பிடக் கூறியுள்ளனர். அதை மட்டும் கொஞ்சமாக சாப்பிட்டுள்ளார்.
அழுதபடியே இருந்த பூவரசி, நான் பாவம் செய்து விட்டேனே என்று கூறியபடியே இருந்தாராம்.
பொதுமக்கள் ஆவேசம்
முன்னதாக அவரை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஐர்படுத்த போலீஸார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு பெருமளவில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக பெண்கள் பெருமளவில் இருந்தனர். அனைவரும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். பூவரசியை தாக்காமல் விட மாட்டோம் என கூறியபடி இருந்ததால் பூவரசியைக் கொண்டு வந்தால்சிக்கலாகி விடும் என அஞ்சிய போலீஸார் நேற்று இரவு அவரை மாஜிஸ்திரேட் சாந்தினி வீட்டில் கொண்டு போய் ஆஜர்படுத்தினர். அவர் பூவரசியை 15 நாள் ரிமாண்ட்டில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பூவரசியை போலீஸார் சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர்.
முன்னதாக பூவரசியை அவர் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்ற போலீஸார் கொலை செய்தது எப்படி என்பதை நடித்துக் காட்டக் கூறினர். அவரும் அதுபோல செய்தார். அதேபோல கோயம்பேடு பஸ் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications